நீர்பிடிப்பு பகுதியில்தொடர்ந்து மழை: பவானிசாகர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது
Advertisement
நேற்று காலை அணைக்கு நீர்வரத்து 6,872 கனஅடியாக இருந்தது. இன்று 20,092 கன அடியாக அதிகரித்து உள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது.இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 74.48 அடியாகவும், நீர் இருப்பு 12.9 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் 1105 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து பவானிசாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisement