ஜாதி கலவர பேச்சு சீமானுக்கு எதிராக திருப்பூரில் போஸ்டர்
திருப்பூர்: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு இடங்களில் பலவிதமான பேட்டிகளை அளித்து வருகிறார். அதேபோல் நாம் தமிழர் கட்சியில் உள்ள சாட்டை துரைமுருகன் யூ டியூப் சேனல் மூலமாக பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் பேசி வருகிறார்.
சமீபத்தில் வேளாளர் பெயரில் பேசிய சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோருக்கு எதிராக திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் வேளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், வேளாளர் பெயரில் வரலாற்றை திருடி மாற்று சமுதாயத்திற்கு ஆதரவாக பேசி ஜாதி கலவரத்தை தூண்டும் நாம் தமிழர் கட்சியின் சீமான், சாட்டை துரைமுருகன் ஆகியோர் நாவை அடக்க வேண்டும். இல்லையென்றால் அடக்கப்படுவீர்கள் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.