நாடு முழுவதும் 2027ம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய அரசு திட்டம்
05:47 PM Jun 04, 2025 IST
Share
டெல்லி: நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2027ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக், உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் அடுத்தாண்டு அக்டோபரில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.