10 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை விதிப்பு அமலாக்கத்துறை நேர்மையின்றி செயல்படக் கூடாது: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
புதுடெல்லி: அமலாக்கத்துறை அதிகாரம் தொடர்பான சீராய்வு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தனது தரப்பு வாதங்களை முன்வைக்க ஆரம்பித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அமலாக்கத்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்து கூறியதாவது: அமலாக்கத்துறை ஒரு குரூர புத்தி கொண்டவர்களை போன்று செயல்படக் கூடாது.
அமலாக்கத்துறை வழக்குகளில் தண்டனை விகிதம் என்பது 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. அமலாக்கத்துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது வெளிச்சமாக தெரிகிறது. இது அதிருப்தி அளிக்கிறது. அமலாக்கத்துறை நேர்மையின்றி செயல்படக் கூடாது. சட்டத்துக்கு உட்பட்டே அமலாக்கத்துறை செயல்பட வேண்டும். குற்றவாளி என ஒருவர் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், எந்த வழக்கு விசாரணையையும் நடத்தாமல் பல நாட்களாக அந்த நபரை சிறையில் வைப்பதை அமலாக்கத்துறையாகிய நீங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளீர்கள்.
ஒரு நீதிமன்ற நடவடிக்கையில் நாங்கள் சில விசயங்களை கவனித்தோம். அதில்அமலக்கத்துறை சுமார் 5 ஆயிரம் அமலாக்க வழக்கு தகவல் அறிக்கை பதிவு செய்ய்யப்பட்டது. ஆனால் தண்டனை என்பது 10சதவீதத்திற்கு குறைவாகவே கிடைக்கப்பெற்றுள்ளது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அமலக்கத்துறையின் என்ற பிம்பம் எங்களுக்கு மிகவும் கவலையை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக அமலக்கத்துறையால் தொடரப்பட்ட வழ்ககுகளில் ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் நீதிமன்றக் காவலின் முடிவில், சம்மந்தப்பட்ட நபர்கள் விடுவிக்கப்பட்டால், இதற்கு யார் பதில் கூறுவார்கள். இதற்கு அமலாகத்துறை பொறுப்பு ஏற்குமா? இவ்வாறு சரமாரி கேள்வியெழுப்பிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். உச்ச நீதிமன்றத்தை பொருத்தமட்டில் சிறை வைப்பதற்காக பணப் பரிவர்த்தனை வழக்கா என்பது உட்பட அமலாக்கத்துறைக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.