இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே விரைவில் சரக்கு விமானங்கள் சேவை!
Advertisement
டெல்லி: இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே விரைவில் சரக்கு விமானங்கள் சேவையை தொடங்க உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. ஆப்கான் வர்த்தக அமைச்சர் டெல்லி வந்துள்ள நிலையில், ஆப்கான் தலைநகர் காபூலுக்கு டெல்லி, அமிர்தசரஸில் இருந்து சரக்கு விமானங்கள் சேவையை மீண்டும் தொடங்கும் முடிவை இந்திய வெளியுறவு இணைச் செயலாளர் ஆனந்த் பிரகாஷ் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் உடனான வர்த்தக உறவை நிறுத்த முடிவு செய்துள்ள ஆப்கானிஸ்தான், இந்தியா உடனான உறவை வலுப்படுத்துகிறது.
Advertisement