தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்டுப்பாட்டை இழந்த கார் சரக்கு வாகனத்தில் மோதி விபத்து தம்பதி உயிரிழந்தனர்

 

Advertisement

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டம் ஆவடி அடுத்து திருவேற்காடுஈஸ்வரிநகர் ஏழாவது தெருவை சேர்ந்தவர் 41 வயதான அறிவரசன் இவரது மனைவி சரண்யா தனியார் நிறுவன மேலாளராக பணியாற்றிவருகிறார். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஆண் பெண் என இரட்டை குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி அறிவரசன் மனைவி உடன் டிவிஎஸ் ஸ்கூட்டரில் ஆவடி வசந்தம் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக தறிகெட்டு வந்த கார் ஸ்கூட்டரில் மோதி இழுத்து சென்றது. கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் நின்றுஇருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி தலைக்குப்பிற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோரவிபத்தில் அறிவரசன் சரண்யா தம்பதி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இந்த விபத்தை ஏற்படுத்தியது 46 வயதான அரசு மருத்துவர் என்பது தெரியவந்தது.

இந்த விபத்தில் அவர் காயம் அடைந்து சம்பவ இடத்தில் விழுந்து கிடந்தார் அவரை மீட்ட போலீசார் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில் காரை வேகமாக ஒட்டி சென்றபோது திடீர் என வலிப்பு ஏற்பட்டு விபத்து நடந்தது தெரியவந்தது. மருத்துவர் சிகிச்சை முடிந்து நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.

அவர் மீது அதிவேகமாக கார் ஓட்டுதல் அலட்சியமாக வாகனம் ஓட்டி உயிர் இழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement