கார் வெடிப்பு சம்பவம்.. நடுங்கி அடங்கியது டெல்லி; அதிர்ந்து ஒடுங்கியது நெஞ்சு: கவிஞர் வைரமுத்து!!
சென்னை: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதில் பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. 24 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியதாவது;
நடுங்கி அடங்கியது டெல்லி
அதிர்ந்து ஒடுங்கியது நெஞ்சு
இறந்தோர் உயிர்
அமைதியடைக
காயமுற்றோர் உடல்
நலமே பெறுக
எது காரணமாயினும்
இன்னொரு முறை அது
நிகழாதொழிக
அரசியல் செய்யாமல்
அறமே செய்க
அமைதியின் சிறகடியில்
தேசம் இளைப்பாறுக
"யுத்தம் இல்லாத பூமி - ஒரு
சத்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத
மனித இனம் – இந்த
மண்ணில் நிலைகொள்ளும்
வரம் வேண்டும்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.