கேப்டன் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள்; ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் புகழாரம்!
சென்னை: கேப்டன் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாளையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மறைந்த தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் திரைப்பிரபலங்கள் என பலரும் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளில் அவருடைய திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தியும், அவரது இனிய நிகழ்வுகளை பகிர்ந்தும் வருகின்றனர்.
இந்நிலையில், கேப்டன் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாளையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்ததாவது; அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடமை, நேசம், நேர்மை, போர்க்குணம் ஆகியவற்றின் உருவமாக திகழ்ந்தவர் விஜயகாந்த். இன்றும் நினைவுகளின் வழியே விஜயகாந்த் நம்முடன் இருப்பதாகவே உணர்கிறேன். அவரது புகழ் ஓங்குக. இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.