கான்வா!
ஒரு சிறு தொழில் வளர்ச்சி என்றாலும் அதற்கும் பேனர்கள், விளம்பரங்கள், சமூக வலைதள பதிவுகள் என உருவாக்கியாக வேண்டும். இதற்குதான் உதவுகிறது ‘‘ கான்வா’’ செயலி ( Canva). சமூக வலைதளங்களில் விளம்பரம், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு போஸ்டர், பிரவுச்சர், அழைப்பிதழ் போன்றவற்றை உருவாக்க ‘‘கான்வா’’ செயலி மூலம் சில நிமிடங்களிலேயே டிசைன்களை தயார் செய்து விடலாம். அதிலும் ஆயிரக் கணக்கான டெம்ப்ளேட்கள், நிறங்கள், எழுத்துருக்கள், படங்கள், வீடியோக்கள் அனைத்தும் தயாராகக் கிடைப்பதால், தனியாக புதிய யோசனைகளைச் சிந்திக்காமல், இருப்பவற்றை மாற்றி அமைத்து உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. வீட்டிலிருந்து தொழில் நடத்துபவர்கள், குறிப்பாக கேக் ஆர்டிஸ்ட்கள், ஆன்லைன் விற்பனையாளர்கள், யூடியூபர்கள், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்கள் போன்றவர்களுக்கு கான்வா ஒரு மிகப் பெரிய விளம்பர உதவியாளர். முன்பு போட்டோஷாப் தெரிந்தால் மட்டுமே இவை சாத்தியம் என்றிருந்த நிலை தற்போது ஒரு மொபைலில் சில நிமிடங்களில் முடிந்துவிடும்.