தேர்வர்களின் முக அங்கீகாரத்தை சரிபார்க்க ஏ.ஐ. தொழில்நுட்பம்: யுபிஎஸ்சி அறிமுகம்
புதுடெல்லி: ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தின்( யுபிஎஸ்சி) தலைவர் அஜய் குமார் கூறுகையில், போட்டி தேர்வுகளில் விரைவான பாதுகாப்பான முறையில் தேர்வர்களின் சரிபார்ப்புக்காக முக அங்கீகாரத் தொழில்நுட்பம் (ஏஐ) சோதனை நடத்தப்பட்டது.
Advertisement
கடந்த 14ம் தேதி நடந்த தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி, ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளுக்கான தேர்வுகளின் போது இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. குருகிராமில் உள்ள சில மையங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அங்கு தேர்வர்களின் படங்கள் அவர்களின் விண்ணப்ப படிவங்களில் சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்களுடன் டிஜிட்டல் முறையில் பொருத்தப்பட்டன. புதிய ஏஐ அமைப்பு சரிபார்ப்பு நேரத்தை 10 வினாடிகள் வரை குறைத்தது என்றார்.
Advertisement