புற்றுநோய்: அமெரிக்க மாஜி அதிபர் ஜோ பைடனுக்கு கதிர்வீச்சு சிகிச்சை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக இருந்தவர் ஜோ பைடன்(82). இவர் உடல்நலக்குறைவு காரணமாக பதவி காலம் முடிவதற்கு முன்பாகவே, அதிபர் பதவியில் இருந்து விலகினார். அதிபர் பதவியை விட்டு விலகிய பின்னர் அவரது சிறுநீர் பையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுநீர் பையில் ஏற்பட்ட புற்றுநோய் எலும்புகளுக்கும் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிலடெல்பியாவில் உள்ள மருத்துவமனையில் ஜோ பைடன் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement