கனடா பிரதமர் கார்னே அடுத்த ஆண்டு இந்தியா வருகை
ஜோகன்ஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டின்போது இந்திய பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னே ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது கனடா பிரதமர் இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். கனடா பிரதமர் மார்க் கார்னேயும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். இது தொடர்பாக கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,‘‘2026ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை கனடா பிரதமர் மார்க் கார்னே ஏற்றுக்கொண்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement