கனடா ஓபன் டென்னிஸ்: அரியனாவை எளிதில் அடக்கி சரியான பாடமெடுத்த ஒஸாகா; 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
Advertisement
முதல் செட்டை சாக்ரி 6-2 என்ற புள்ளிக் கணக்கிலும், 2வது செட்டை, கார்சன் 6-3 என்ற கணக்கிலும் வசப்படுத்தினர். எனவே 3வது செட்டை கைப்பற்ற இருவரும் கடுமையாக போராடினார். இருப்பினும் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய சாக்ரி அதை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். எனவே 2 மணி 21 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய சாக்ரி 2வது சுற்றுக்குள் நுழைந்தார். அதேபோல் ஜெர்மனி வீராங்கனைகள் தட்ஜனா மரியா (37 வயது, 41வது ரேங்க்), லவுரா சீகமண்ட் (27வயது, 24வது ரேங்க்) ஆகியோர் இடையிலான முதல் சுற்று 3 மணி 26 நிமிடங்கள் நீடித்தது. அதில் 2 செட்கள் டை பிரேக்கர் வரை சென்றன. முடிவில் லவுரா 7-5, 6-7 (6-7), 7-6 (7-2) என்ற செட்களில் வெற்றிப் பெற்றார்.
Advertisement