கனடாவில் பயங்கர தீ விபத்து 5 இந்தியர்கள் பரிதாப பலி
ஒட்டாவா: கனடா நாட்டில் உள்ள பிராம்டன் நகரின் மேக் லாக்லின் சாலை மற்றும் ரீமெம்பரன்ஸ் சாலை சந்திக்கும் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கீழ் தளத்தில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். மேல் தளத்தில் வசித்தவர்களில் 4 பேர் தீயில் சிக்கி உடல் கருகினர்.
கர்ப்பிணியான ஆரஷ்வீர் கவுர் என்ற பெண் உயிர் பிழைக்க ஜன்னலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் ஆரஷ்வீர் உயிர் தப்பினார். கருவில் இருந்த குழந்தை இறந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.
தீயில் கருகியவர்கள் அனைவரும் பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். தீ விபத்தில் காயமடைந்த ஒரு சிறுவன் உட்பட 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.