தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி: விஜய்யை சந்தித்து ஆறுதல் பெற சென்னைக்கு 5 பஸ்சில் வந்தது கரூர் பாதிப்பு குடும்பங்கள்

* மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் 50 அறைகள் புக்கிங், 30வது நாளில் இன்று ரூம் ரூமாக சென்று பேசுகிறார்

Advertisement

கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்டோரிடம் வீடியோ காலில் பேசி கரூருக்கு வருவதாக விஜய் ஆறுதல் கூறி, தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதியை நேரில் வந்து கொடுப்பதாக கூறினார்.

ஆனால், கடந்த 18ம் தேதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்கில் தலா ரூ.20 லட்சம் தவெக சார்பில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், சம்பவம் நடைபெற்று 30 நாளுக்குள் 41 பேரின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து ஆறுதல் கூற முடிவு செய்யப்பட்டது. ஆனால், கரூர் செல்லாமல் திடீரென 30வது நாளில் 41 பேரின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க விஜய் முடிவு செய்தார். இதற்காக பாதிக்கப்பட்டோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தவெக நிர்வாகிகள் பேசினர்.

இதையடுத்து மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் 41 பேரின் குடும்பத்தினரை சந்திக்க விஜய் முடிவு செய்தார். இந்த சந்திப்பு நிகழ்ச்சி இன்று (27ம்தேதி) காலை நடக்கிறது. இதற்காக அந்த ஓட்டலில் மொத்தம் 50 அறைகள் தவெக சார்பில் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையில் ஒவ்வொரு குடும்பத்தினரை விஜய் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.  கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த கரூர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோட்டை சேர்ந்த 41 பேரின் குடும்பத்தினரிடம் தவெக நிர்வாகிகள் நேரிலும், போனிலும் சென்னை செல்ல விருப்பமா எனவும், எத்தனை பேர் வருகிறீர்கள் எனவும் விபரங்களை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கேட்டறிந்தனர்.

இதில் கரூரில் உள்ள 27 குடும்பங்களில், 22 குடும்பத்தினர் சென்னை செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனர். இதில் 5 குடும்பத்தினர் வர சம்மதிக்கவில்லை. இதனால் 22 குடும்பத்தினரை மட்டும் அழைத்து செல்வதற்காக 5 ஆம்னி பேருந்துகள் சென்னையில் இருந்து கரூருக்கு நேற்று காலை வந்தது. சொகுசு பேருந்துகளில் அழைத்து செல்வது சர்ச்சையாகும் என்பதால் பேருந்துகளை கரூர் மாநகருக்கு வெளியில் வெண்ணைமலையில் இருந்து புறப்படும் வகையில் ரகசியமாக தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி, கரூர் ஏமூர் புதூர் பகுதியில் உயிரிழந்த 5 பேர்களின் குடும்பத்தினரை நேற்று காலை 10 மணியளவில் கார், மினி வேனுடன் வந்த தவெக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் வாகனங்களில் அழைத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.  இதேபோல், பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார் மற்றும் மினி வேன்களில் அழைத்து வரப்பட்ட அனைவரும் வெண்ணைமலை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 5 ஆம்னி பேருந்துகளில் ஏற்றப்பட்டு காலை 11.55 மணியளவில் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

இதில் முதற்கட்டமாக, இறந்தவர்களின் 22 குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காலையில் புறப்பட்டு சென்றதாகவும், மீதி உள்ள 5 குடும்பத்தினரை இரவில் ஆம்னி பஸ்சில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதே போல் ஈரோடு, திருப்பூர், சேலம், மதுரையை சேர்ந்த 8 குடும்பத்தினரின் உறவினர்களை தவெக நிர்வாகிகள் தனித்தனியாக அழைத்து சென்றனர்.

* ஊன்றுகோலுடன் வந்த உறவினர்

உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் குறைந்தது 5 முதல் 10 பேர் வரை வந்து சொகுசு பேருந்துகளில் ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது, விஜய் கூட்ட நெரிசலில் வலது காலில் காயமடைந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஊன்றுகோல் உதவியுடன் தட்டுத்தடுமாறி பேருந்து அருகில் வந்த போது, சிலர் அவருக்கு உதவி செய்து ஏற்றி அனுப்பினர்.

* அரசியல் வரலாற்றில் ஒரு புதுமை

பொதுவாக பெரிய விபத்து ஏற்பட்டு பலர் இறக்க நேர்ந்தால் அவர்களது வீடுகளுக்கே அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதுதான் வழக்கம். கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கும் முதல்வர், துணை முதல்வர், ஒன்றிய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண நிதியையும் வழங்கினர்.

ஆனால் அரசியல் வரலாற்றில் புதுமையாக தவெக தலைவர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறாமல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கே வரவழைத்து ஆறுதல் கூற உள்ளார். இதில் இருந்து தெரிகிறது விஜய் ஒரு அரசியல் அனுபவம் இல்லாதவர் என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.

* 22 குடும்பத்துக்கு 5 பஸ்சா?

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து விஜய் ஆறுதல் கூறுகிறார். இதற்காக கரூரில் இருந்து 5 சொகுசு பேருந்துகள் புறப்பட்டு சென்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் இருந்து 2பேர் அல்லது 3 பேர் தான் அழைத்து செல்லப்படுவார்கள் என்று தவெகவினர் தெரிவித்து இருந்தனர். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்ற தவெகவினர், விஜய்யை பார்க்க சென்னைக்கு எத்தனை பேர் வருகிறீர்கள் என்று கேட்டனர்.

விஜய்யை நேரில் பார்க்க கூப்பிடுகிறார்கள் என்ற ஆர்வத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் 5பேர், 10 பேர் வருவதாக தெரிவித்தனர். இதனால் 5 சொகுசு பஸ்களை ஏற்பாடு செய்து, சென்னைக்கு பிக்னிக் செல்வது போல தவெகவினர் அழைத்து சென்றுள்ளனர்.

* அன்று தவித்த வாய்க்கு இன்று தண்ணீரா?

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களுக்கு குடிநீர் கிடைக்காததும், அவர்கள் சைகை காட்டி தண்ணீர் கேட்டதும், அதை கண்டுகொள்ளாமல் விஜய் பேசிக்கொண்டிருந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், பஸ்சில் அழைத்து செல்லப்படும் குடும்பத்தினருக்கு மீண்டும் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் இருக்க சரக்கு வேனில் பாக்ஸ், பாக்ஸாக தண்ணீர் பாட்டில்களை எடுத்து வந்து ஒவ்வொரு பஸ்சிலும் ஏற்றி அனுப்பினர். இன்று பாட்டில் பாட்டிலாக கொடுப்பவர்கள் அன்று தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்திருந்தால் பெரும் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாமே என்று இதை பார்த்த அப்பகுதியினர் அங்கலாய்த்தனர்.

* சென்னை பயணத்தால் துக்கநாளை அனுசரிக்க முடியாத குடும்பத்தினர்

இறந்தவர்களின் 30ம் நாள் துக்க நிகழ்ச்சி (காரியம்) நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் பல குடும்பத்தினர் துக்க நிகழ்ச்சியை அனுசரித்தனர். இதில் ஒரு சிலர், விஜய்யை சந்திப்பதற்காக சென்னை சென்றுவிட்டு வந்த பின்னர் துக்கநாளை அனுசரிக்க முடிவு செய்துள்ளனர்.

* எமகண்டம் பார்த்து... எலுமிச்சம் பழம் வைத்து... சூடம் காட்டி புறப்பட்ட பஸ்கள்

பிற்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை எமகண்டம் என்பதால், 5 சொகுசு பேருந்துகளும், எமகண்டம் தொடங்கும் முன்பு புறப்பட வேண்டும் என தவெகவினர் தெரிவித்தனர். அற்காக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அவசர, அவசரமாக பேருந்தில் ஏறும்படி தெரிவித்தனர். அதன்படி அனைவரும் ஏறிய பின்னர் பஸ் டயர்களுக்கு எலுமிச்சம்பழம் வைக்கப்பட்டது. டிரைவர் சூடம் காட்டியதோடு, சிதறு தேங்காயை உடைக்க முயன்றார்.

அப்போது, தேங்காய் உடையாமல் உருண்டு ஓடியது. டிரைவர் அந்த தேங்காயை எடுத்து மீண்டும் உடைத்தார். அப்போதும் தேங்காய் உடையாமல் உருண்டு ஓடியது. 3வது முறையாக அந்த தேங்காயை எடுத்து உடைத்து சிதற வைத்தார். இதனால் பேருந்தில் இருந்தவர்கள் புறப்படும்போதே தடங்கல் ஏற்படுகிறதே என்று வேதனையுடன் பயணித்தனர்.

Advertisement

Related News