கம்போடியா - தாய்லாந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை
கோலாலம்பூர்: கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே கடந்த மாதம் 24ம் தேதி எல்லை பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. பின்னர் இருநாடுகளும் ஒன்றன் மீது ஒன்று கடுமையாக தாக்குதல் நடத்தி தீவிரமான போரில் ஈடுபட்டன. இதன் காரணமாக பத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 2லட்சத்து 60ஆயிரம் பேர் இடம்பெயர்ந்தனர். இந்நிலையில் அமெரிக்கா கொடுத்த அழுத்தம் காரணமாக கடந்த 28ம் இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான சமரச பேச்சுவார்த்தை மலேசியாவில் நேற்று நடைபெற்றது. இதில் மோதல்களை தவிர்ப்பதற்கான விவரங்கள் சரிசெய்வதில் கவனம் செலுத்தப்பட்டது.