Home/செய்திகள்/Cabinet Approves Plan To Create 1crore Jobs In Bihar
அடுத்த ஐந்தாண்டுகளில் பீகாரில் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம்: அமைச்சரவை ஒப்புதல்
01:11 AM Jul 16, 2025 IST
Share
Advertisement
பாட்னா: பீகாரில் அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 2030ம் ஆண்டுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.மேலும், இதுதொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, முடிவுகளை எடுக்க மேம்பாட்டு ஆணையர் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அமைக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.