பிஒய்டி ஆட்டோ நிறுவனம், இந்தியச் சந்தையில் தனது பங்களிப்பை விஸ்தரிக்க புதிய காரை களம் இறக்க முடிவு செய்துள்ளது. தற்போது அட்டோ 3 எஸ்யுவி மற்றும் இ6 எம்பிவி என்ற இரண்டு எலக்ட்ரிக் கார்கள் உள்ளன. மூன்றாவதாக சீல் என்ற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய உள்ளது. சென்னைப் புறநகர்ப் பகுதியில் இதன் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த காரில் 82.5 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றிருக்கும் எனவும், முழுமையாக சார்ஜ் செய்தால் 700 கி.மீ தூரம் வரை செல்லும் எனவும் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷோரூம் விலை சுமார் ₹50 லட்சமாக இருக்கும். மார்ச் 5ம் தேதி இந்தியாவில் சந்தைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.