ஓசூர் அருகே பரபரப்பு கன்டெய்னர் லாரி தீப்பிடித்து 40 பைக்குகள் எரிந்து நாசம்
Advertisement
இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் போராடி, தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் கன்டெய்னர் லாரியில் இரு அடுக்குகளில் கொண்டு சென்ற பைக் மற்றும் ஸ்கூட்டர் என 40 புதிய வாகனங்கள் எரிந்து எலும்பு கூடானது. இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement