புஸ்ஸி ஆனந்த் புதுவையில் தஞ்சம்?
புதுச்சேரி: கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர், வராவிட்டால் கைது செய்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் தலைமறைவாகியுள்ளதாக தெரிகிறது.
Advertisement
புஸ்ஸி ஆனந்தின் வீடு புதுச்சேரி மாநிலம் ஏனாம் வெங்கடாசலப்பிள்ளை வீதியில் உள்ளது. அவர் முதல்வர் ரங்கசாமிக்கு வேண்டப்பட்டவர் என்பதால், புதுச்சேரியில் இருக்கலாம் என தமிழக போலீசார் எண்ணி பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினர். மேலும் போலீசார், மாறு வேடங்களில் முகாமிட்டு, புஸ்ஸி ஆனந்தை தேடி வருகின்றனர்.
Advertisement