தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முன்னாள் ஊழியர் பாலியல் பலாத்கார புகார்: பிரபல தொழிலதிபர் சமீர் மோடி கைது

புதுடெல்லி: முன்னாள் ஊழியர் அளித்த பாலியல் பலாத்காரப் புகாரில், பிரபல தொழிலதிபர் சமீர் மோடி டெல்லி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பிரபல தொழிலதிபரும், தலைமறைவு ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியின் சகோதரருமான சமீர் மோடி மீது, அவரிடம் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் கடந்த 10ம் தேதி பாலியல் பலாத்காரப் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், அவருக்கு எதிராக தேடப்படும் நபருக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்த சமீர் மோடியை, காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

Advertisement

அவரது குடும்பத்தில் சொத்துப் பிரச்னை நீடித்து வரும் சூழலில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீர் மோடி, திருமணம் செய்து கொள்வதாகப் பொய்யான வாக்குறுதி அளித்து, கடந்த 2019ம் ஆண்டு முதல் தன்னைத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மிரட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை என சமீர் மோடி தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. பணம் பறிக்கும் நோக்கில் அந்தப் பெண் தன்னிடம் 50 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும், இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதமே காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகவும், அதற்கான வாட்ஸ்அப் உரையாடல் ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் சமீர் மோடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement