தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடன் தொல்லையால் விபரீத முடிவு; மனைவி, 2 மகன்களை பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி மூச்சு திணறடித்து கொடூரமாக கொன்ற தொழிலதிபர்: துக்கம் தாங்காமல் பாத்ரூமில் தொழிலதிபரும் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை

 

Advertisement

* உருக்கமான கடிதம் சிக்கியதால் பரபரப்பு

சென்னை: கடன் தொல்லையால் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களை இரவு தூங்கிய பிறகு பிளாஸ்டிக் கவரை முகத்தில் மூடி மூச்சு திணறடித்து கொடூரமாக கொலை செய்தார். தனது குடும்பம் இறந்த துக்கம் தாங்காமல் தொழிலதிபர் பாத்ரூமில் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பு தொழிலதிபர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியதால் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி தாமோதர குப்தா(56).தொழிலதிபரான இவருக்கு மனைவி ரேவதி(46), ரித்விக் அர்ஷத்(15) மற்றும் தித்விக் அர்ஷத்(11) ஆகிய 2 மகன்கள். தொழிலதிபர் சிரஞ்சீவி சென்னை அண்ணாசாலையில் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சிசிடிவி கேமரா மொத்த விற்பனை கடை நடத்தி வந்தார்.

சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூத்த மகன் அர்ஷத் 10ம் வகுப்பும், இரண்டாவது மகன் தித்விக் அர்ஷத் 7ம் வகுப்பும் படித்தனர். மகன்கள் பள்ளி படிப்புக்காக தொழிலதிபர் சிரஞ்சீவி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் ‘சாகாஷ் வைபவ் என்கிளைவ்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடியேறியுள்ளார். தொழிலதிபர் என்பதால் சிரஞ்சீவி, தனது கடையை விரிவுப்படுத்த பல கோடிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கொரோனா இழப்புக்கு பிறகு கடை சரியாக ஓடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்த நபர்கள் தொழிலதிபர் சிரஞ்சீவியை பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கியவர்களும் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.

ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் தொழிலதிபருக்கு ெநருக்கடி கொடுத்து வந்ததால்,சிரஞ்சீவி கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அதேநேரம் கடன் கொடுத்தவர்கள் தொழிலதிபர் மனைவி ரேவதிக்கு நேரடியாக தொலைபேசியில் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடன் தொல்லையால் ‘தீபாவளி’ பண்டிகையும் தொழிலதிபர் கொண்டாடவில்லை. தனது மகன்களுக்கும் பட்டாசுகள் கூட தொழிலதிபர் வாங்கி கொடுக்கவில்லை என்று அருகில் வசிக்கும் நபர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் இன்று அதிகாலை சேலத்தில் உள்ள தொழிலதிபரின் மாமா முரளி என்பவரின் வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சம் பணம் தொழிலதிபர் சிரஞ்சீவி அனுப்பியுள்ளார். இன்று காலை முரளி எழுந்து தனது போனை பார்த்த போது ரூ.1 லட்சம் பணம் வங்கி கணக்கில் போடப்பட்டிருந்தது.

உடனே இதுகுறித்து முரளி, தொழிலதிபர் சிரஞ்சீவிக்கு போன் செய்துள்ளார். வெகு நேரம் போன் அடித்தும் சிரஞ்சீவி போனை எடுக்காததால் சந்தேகமடைந்து முரளி, சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் ரேவதியின் தம்பி, சாய் கிருஷ்ணாவுக்கு தகவல் அளித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அதேநேரம் வீட்டின் கதவு வெகு நேரம், திறக்காததால் சந்தேகடைந்து குடியிருப்பில் அருகில் வசிக்கும் நபர்கள் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கவில்லை.

அதேநேரம் சாய் கிருஷ்ணாவும் தனது சகோதரி ரேவதி வீட்டிற்கு வந்தார். அவரும் கதவை தட்டியும் சகோதரி கதவை திறக்காததால் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, படுக்கை அறையில் சகோதரி ரேவதி, மற்றும் இரண்டு மகன்கள், பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடிய நிலையில் படுக்கையிலேயே இறந்து கிடந்தனர்.

தனது மாமாவான தொழிலதிபரை தேடிய போது, அவர் படுக்கை அறையில் உள்ள பாத்ரூமில் தனது கால்களை கட்டிய நிலையில் கத்தியால் கை மணிகட்டு மற்றும் கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத சாய் கிருஷ்ணா அதிர்ச்சியடைந்து நீலாங்கரை போலீசாருக்கு சம்பவம் குறித்து தகவல் அளித்தார். அதன்படி விரைந்து வந்த நீலாங்கரை போலீசார், தொழிலதிபர் சிரஞ்சீவி மற்றும் அரவது மனைவி ரேவதி, 2 மகன்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் தொழிலதிபர் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். தமிழில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதைதொடர்ந்து சாய் கிருஷ்ணன் அளித்த புகாரின் படி நீலாங்கரை போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலதிபர் யார், யாரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் மிரட்டினார்களா? என தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி செல்போன்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தொழிலதிபரிடம் கடைசியாக பேசிய நபர் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தொழிலதிபர் சிரஞ்சிவி தனது மனைவி மற்றும் மகன்களை கொலை செய்வதற்கு முன்பு, தற்கொலைக்கான கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மனைவி ரேவதியும் கையெழுத்து போட்டுள்ளார். இதனால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. மனைவி கடிதத்தில் கையெழுத்து போட்டுள்ளதால், அதுவும் இன்று தேதியிட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவரை ஏன் முகத்தில் பிளாஸ்டிக் கவரால் மூடி மூச்சு திணறடித்து கொலை செய்ய வேண்டும்? இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.

ஆனால் ரேவதி தனது 2 மகன்களை போல் பிளாஸ்டிக் கவரால் மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் சிரஞ்சீவி தனது கால்களை கட்டி கொண்டு பாத்ரூமில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் போலீசார் ெதாழிலதிபர் மனைவி மற்றும் மகன்களை கொலை செய்துவிட்டு, மனைவியின் உறவினர்களுக்கு ரேவதியின் சம்மதத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக நம்ப வைக்க தொழிலதிபர் சிரஞ்சீவி கடித்தில் தனது மனைவியின் கையெழுத்தை போட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இதனால் முழுமையான விசாரணைக்கு பிறகு தான் முழுமையான தகவகள் வெளியே வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகன்களை கொடூரமாக பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி கொலை செய்துவிட்டு, தானும் கத்தியால் கழுத்து மற்றும் கை மணிகட்டை அறுத்து தற்கொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தொழிலில் நஷ்டம்

தொழிலதிபர் மனைவி மற்றும் இரண்டு மகன்களை கொடூரமாக கொலை செய்துவிட்டு தற்ெகாலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிவைத்த கடிதம் போலீசார் நடத்திய சோதனையில் சிக்கியது. அந்த கடிதத்தில் ‘ தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடன் எதையும் இதற்கு மேல் திரும்பி செலுத்த முடியாத காரணத்தால், சிரஞ்சீவி என்னும் நான், எனது குடும்பத்தோடு உயிரை மாய்த்து கொள்கிறோம். எங்களது இறப்பிற்கு யாரும் பொறுப்பல்ல. இது நான் எல்லோருக்கும் தொிவித்து கொள்கிறேன்’. என எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர் கையெழுத்து மற்றும் அவரது மனைவி ரேவதியின் கையெழுத்தும் போடப்பட்டுள்ளது.

Advertisement