பேருந்து கட்டணங்கள் உயர்த்தும் திட்டம் இல்லை: போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கம்
Advertisement
கடந்த 2 நாட்களாக பேருந்து கட்டணம் உயர்வு என தகவல் பரவி வரும் நிலையில் முற்றுப்புள்ளி வைத்தார். “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பேருந்து கட்டண உயர்வு என்பது கிடையாது. தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக பேருந்து கட்டண உயர்வு என்ற தகவல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதையொட்டி சில அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசை பொருத்தவரை பேருந்து கட்டண உயர்வு என்பது இல்லை என்பதில் தெளிவாக உள்ளோம். பொதுமக்கள் மீது கட்டண உயர்வு சுமையை ஏற்றக்கூடாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
.
Advertisement