கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு இந்த ஆண்டுக்கான செவாலியே விருது வழங்குவதாக பிரான்ஸ் அறிவிப்பு
Advertisement
கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு இந்த ஆண்டுக்கான செவாலியே விருது வழங்குவதாக பிரான்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 60ஆண்டுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் படங்களுக்கு கலை இயக்குனராக இருந்துள்ளார் தோட்டா தரணி. நாயகன் மற்றும் இந்தியன் படங்களுக்காக கலை இயக்கத்திற்காக இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார். ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் மாநில விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். 1978ல் தெலுங்கில் அறிமுகமான தோட்டாதரணி, தமிழில் 1981ல் கமல் நடித்த ராஜபார்வை படத்தில் அறிமுகமானார். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் இவரது கலை இயக்கம் பெரிதும் பேசப்பட்டது
Advertisement