ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார் என்றால் புல்டோசர் ஏவிவிட்டு அவரது வீட்டை எப்படி இடிக்கலாம் ? : உச்சநீதிமன்றம் கண்டனம்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குகளில் குற்றம்சாட்டப்படும் நபர்களின் வீடுகள், சொத்துகளை புல்டோசர் கொண்டு இடிப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பிறப்பித்த உத்தரவில்,"ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார் என்றால், அவரது வீட்டை எப்படி இடிக்கலாம்? அவர்
தண்டனை பெற்றவராக இருந்தாலும் அவரது வீட்டை சட்டத்துக்கு புறம்பாக இடிக்கக் கூடாது.குற்றச்செயலில் ஈடுபட்டவர் என்பதாலேயே அவரது வீட்டை புல்டோசர் கொண்டு இடிப்பதை அனுமதிக்க முடியாது.
குற்ற வழக்கில் எதிரியாக சேர்க்கப்பட்டதாலேயே ஒருவரது வீட்டை எப்படி இடிக்கலாம்?. சட்ட விரோத கட்டுமானங்களை நாங்கள் பாதுகாக்கவில்லை. அதேவேளையில், அவ்வகை சொத்துகளை அகற்றும் விதிகளை பின்பற்ற வேண்டும்.நாடு முழுவதும் வீடுகளை இடிப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்,"இவ்வாறு தெரிவித்து மனுதாரர்கள் விளக்கமான பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு செப்டம்பர் 17-ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.