எல்லை பாதுகாப்பு படையில் 3588 கான்ஸ்டபிள்கள்
பணி: கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மேன்): மொத்த காலியிடங்கள்: 3588,
டிரேடு வாரியாக இடங்கள் விவரம்:
i) ஆண்கள்: கான்ஸ்டபிள்: காப்ளர்-65, டெய்லர்-18, கார்பென்டர்-38, பிளம்பர்-10, பெயின்டர்-5, எலக்ட்ரீசியன்-4, குக்-1462, வாட்டர் கேரியர்-699, வாஷர்மேன்-320, பார்பர்-115, ஸ்வீப்பர்-652, வெயிட்டர்-13, பம்ப் ஆபரேட்டர்-1, அப்ஹோல்ஸ்டர்-1, கோஜி-3.
ii) பெண்கள்: கான்ஸ்டபிள்: காப்ளர்-2, கார்பென்டர்-1, டெய்லர்-1, குக்-82, வாட்டர் கேரியர்-38, வாஷர்மேன்-17, பார்பர்-6.
சம்பளம்: ரூ.21,700-69,100.
வயது வரம்பு: 23.08.2025 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகள், ஒபிசியினருக்கு 3 வருடங்கள் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது தவிர காலியிடங்கள் ஏற்பட்டுள்ள தொழிற்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் 2 வருட ஐடிஐ படித்திருக்க வேண்டும் அல்லது ஒரு வருட ஐடிஐ படிப்பை முடித்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: ஆண்கள்- குறைந்தபட்சம் 165 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 78 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ., சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
பெண்கள்: குறைந்தபட்சம் 155 செ.மீ., உயரம் இருக்க வேண்டும்.
எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் குறைந்தபட்சம் 160 செ.மீ., உயரம் மற்றும் மார்பளவு சாதாரண நிலையில் 75 செ.மீயும், விரிவடைந்த நிலையில் 80 செ.மீயும் இருக்க வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களும் உயரத்திற்கேற்ற எடை மற்றும் ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
எல்லை பாதுகாப்பு படையால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.10ம் வகுப்பு தகுதி அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும்.
உடற்திறன் தேர்வில் ஆண்கள் 5 கி.மீ., தூரத்தை 24 நிமிடங்களிலும், பெண்கள் 1.6 கி.மீ., தூரத்தை 8.30 நிமிடங்களிலும் ஓடி முடிக்க வேண்டும். உடற்தகுதி தேர்வில் விண்ணப்பதாரரின் உயரம், உடல் எடை பரிசோதிக்கப்படும்.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.150/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் இதர தேர்வு நடைபெறும் இடம்: கர்நாடகா மாநிலம், பெங்களூரு, ஏலஹங்கா விமான நிலையம்.www.rectt.bsf.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.08.2025.