வெறிச்சோடி காணப்படும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா
கொடைக்கானல்: பூக்கள் இல்லாததால் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருந்து வரும் நிலையில் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமான ஒன்றாகும். இந்த நிலையில் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டு ரசிக்கக்கூடிய முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக பிரையண்ட் பூங்கா இருந்து வருகிறது
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் பிரையண்ட் பூங்காவில் செடிகளில் உள்ள பூக்கள் அனைத்தும் உதிர்ந்த நிலையில் வெறும் செடிகளாக மட்டுமே காட்சியளித்து வருகிறது. மேலும் பிரையண்ட் பூங்காவின் உள்ளே செல்வதற்கு 50 ரூபாய் நுழைவு கட்டணமாக பெறப்பட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளே சென்று பார்க்கும் போது மலர்கள் எதுவும் இல்லாத காரணத்தால் ஏமாற்றத்துடன் திரும்பி வரும் சூழல் ஏற்பட்டு வருகிறது.