தலை துண்டித்து மனைவி மற்றும் கள்ளக்காதலன் கொடூர கொலை: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மனைவி மற்றும் கள்ளக்காதலனை கொன்ற கணவர் கொளஞ்சி இருவரின் தலைகளுடன் வேலூர் சிறையில் சரணடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், மலைகோட்டாலம் கிராமத்தில் வசித்து வருபவர் கொளஞ்சி. இவரின் மனைவி லட்சுமி. அதே பகுதியை சேர்ந்த கந்தன் என்பவருக்கும் லட்சுமி என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவில் கள்ளக்காதல் ஜோடி நேரில் சந்தித்துள்ளது. அதாவது, லட்சுமியின் வீட்டின் மொட்டை மாடியில் இருவரும் சந்தித்துக்கொண்டுள்ளனர்.
இதனை நேரில் பார்த்த கொளஞ்சி ஆத்திரத்தில் இருவரின் தலையையும் வெட்டிக்கொலை செய்து இருக்கிறார். மனைவி மற்றும் கள்ளக்காதலனை கொலை செய்த கொளஞ்சி இருவரின் தலைகளுடன் வேலூர் சிறையில் சரண் அடைந்தார். இருவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் அறிந்த காவல்துறையினர், நேரில் விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா? வேறு காரணமா? எனவும் விசாரணை நடக்கிறது. முதற்கட்ட தகவலில் லட்சுமி - தங்கராசு இடையே கள்ளக்காதல் பழக்கமும் தெரியவந்துள்ளது. கொளஞ்சியை கைது செய்து விசாரணை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.