தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புருனே செல்லும் முதல் இந்திய பிரதமர்: டெல்லியில் இருந்து புறப்பட்டார் நரேந்திர மோடி

Advertisement

டெல்லி: 3 நாட்கள் அரசு முறை பயணமாக புருனே, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். இந்தியாவுக்கும் புருனை தருஸ்ஸலாமுக்கும் இடையிலான அரசுசார் உறவுகள் 10 மே 1984-ல் நிறுவப்பட்டன. நடப்பு ஆண்டு இரு நாடுகளின் அரசுசார் உறவுகளின் 40-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. கலாச்சாரத் தொடர்புகளின் அடிப்படையில் இந்தியாவும் புரூனையும் இணக்கமான மற்றும் நட்பு உறவுகளைப் பேணி வருகின்றன. இந்நிலையில் புருனே நாட்டுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.

இன்று புருனே செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது, இந்தியா - புரூணேய் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கவுள்ளனர். இருநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில், இந்தியா - புரூணேய் இடையே விண்வெளித் துறையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது. புருனே நாட்டிற்கு அரசுமுறை பயணமாக செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.

புருனே பயணத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்கிறார். சிங்கப்பூரில் 2 நாட்கள் அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, சிங்கப்பூரின் முக்கிய அமைச்சர்களும் கலந்துகொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிங்கப்பூரில் தொழில் மற்றும் வணிகத் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.

Advertisement