தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சித்தூர் மாநகரில் நாளை மருதுபாண்டியர் சகோதரர்கள் வெண்கல சிலை திறக்கப்படும்

*முதலியார் சங்க மாநில தலைவர் தகவல்

சித்தூர் : சித்தூர் மருதுபாண்டியர் சகோதரர்கள் வென் கலர் சிலை 13ஆம் தேதி திறக்கப்படும் முதலியார் சங்க மாநில முதலியார் சங்க தலைவர் தெரிவித்தார்.சித்தூர் மாநில முதலியார் சங்க தலைவர் புல்லட் சுரேஷ் நேற்று பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:

சித்தூர் மாநகரத்தில் கெங்கினேனி அருகே மருதுபாண்டியர் சகோதரர்களின் வெண்கல சிலை 13ஆம் தேதி(நாளை) திறந்து வைக்கப்படும். சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டைச் சேர்ந்த புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கலந்து கொள்வார்.

தமிழ்நாட்டை சேர்ந்த மருதுபாண்டியர் சகோதரர்கள் 1780ம் ஆண்டு முதல் 1881ம் ஆண்டு வரை சிவகங்கை சீமையில் ஆட்சி புரிந்தனர். அவர்களுடைய 21 ஆண்டு கால ஆட்சியில் ஏழை ஏழை மக்களுக்கு பல்வேறு நல திட்ட உதவிகள் செய்தார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சியில் வெள்ளையர்களை எதிர்த்து 145 நாட்கள் போரில் ஈடுபட்டார்கள். அப்போது பல நூறு வெள்ளையர்களை போரில் கொன்று சாய்த்தார்கள். பின்னர் வெள்ளையர்கள் மருதுபாண்டியர் சகோதரர்களை கைது செய்தனர்.

அப்போது வெள்ளையர்கள் கட்டபொம்மன் தம்பி ஊமை துறையை அவன் இருக்கும் இடத்தை காட்டினால் உங்கள் சகோதரர்களை விடுதலை செய்வோம் இல்லையென்றால் கொன்று விடுவோம் என மிரட்டினார்கள் நண்பனை காட்டிக் கொடுத்தால் உயிர் பிழைப்போம் என நினைக்காமல் வெள்ளையர்களை எதிர்த்து ஊமதுரையை காட்டிக் கொடுக்காமல் போரில் ஈடுபட்டார்கள்.

இதனால் வெள்ளையர்கள் மருதுபாண்டி சகோதரர்களை உறவினர்கள் முன்னிலையில் தூக்கில் இட்டு கொலை செய்தார்கள் அதுமட்டுமல்லாமல் மருதுபாண்டி சகோதரர்களின் வாரிசு இல்லாமல் அவர்களின் சொந்த பந்தங்களில் உள்ள அனைத்து ஆண்களையும் கொன்று விட்டார்கள்.

அவர்கள் வம்சத்தில் பெண்கள் மட்டுமே தற்போது வரை இருந்து வருகிறார்கள். வீரபாண்டியர் சகோதரர்களின் சகோதரி வம்சாவளியான ராமசாமி என்பவர் மட்டுமே தற்போது அவர்களின் வம்சா வழியாக இருந்து வருகிறார். அவரும் இந்த வெண்கல சிலைதிறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

மேலும் சித்தூர் எம்எல்ஏ ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னாள் அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டி மிதுன் ரெட்டி, பூமண கருணாகர் ரெட்டி உள்பட ஏராளமான தலைவர்கள் இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார்கள்.

ஆகவே மருதுபாண்டியர் சகோதரர்கள் வெண்கல சிலை திறப்பு விழாவில் சித்தூர் மாவட்டம் மக்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும், பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக மருதுபாண்டி சகோதரர்களின் வெண்கல சிலை திறப்பு விழாவை முன்னிட்டு அழைப்பிதழை வெளியீடு செய்தார். இதில் கவுன்சிலர்கள் அலி, ஸ்ரீகாந்த், சகாதேவன், முன்னாள் மாநகராட்சி சேர்மன் பாஸ்கர், முதலியார் சங்க மாவட்ட தலைவர் புல்லட் அப்பு உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு போஸ்டர் வெளியீடு செய்தனர்.

Related News