கொட்டிக்கிடக்கும் செங்கல்கள் கோபுரமாகிவிடாது: விஜய்க்கு செம்மலை கண்டனம்
சென்னை: கொட்டிக்கிடக்கும் செங்கல்கள் கோபுரமாகிவிடாது என்று விஜய்க்கு செம்மலை கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக பற்றி விஜய் பேசுவது வேடிக்கையாக உள்ளது. அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற ஆளுமை மிக்க தலைவர்களோடு விஜய் தன்னை ஒப்பிடுவதை ஏற்க இயலாது. அண்ணா, எம்.ஜி.ஆர். கூட கட்சி தொடங்கிய உடன் தான்தான் முதல்வர் என்று கூறவில்லை. கட்சி ஆரம்பித்த உடனேயே ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது அதீத ஆசை. எனவே விஜய் சொல்வதுபோல் நடக்க வாய்ப்பே இல்லை என செம்மலை பதிலடி கொடுத்துள்ளார்.
Advertisement
Advertisement