லஞ்ச வழக்கில் கைதான அங்கித் திவாரி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி: ஐகோர்ட் கிளை உத்தரவு
Advertisement
இந்நிலையில், இந்த மனு நீதிபதி எம்.தாண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிகுமார் ஆஜராகி, மனுதாரருக்கு எதிரான வழக்கில் இறுதி அறிக்கை தயார் நிலையில் உள்ளது. உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து இருந்ததால் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்’ என கூறி அதற்கான நகலை நீதிபதி முன்பு தாக்கல் செய்தார். இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Advertisement