காலை உணவு திட்டம் தமிழ்ச் சமுதாயத்துக்கான முதலீடு : முதல்வர்
Advertisement
சென்னை : நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க ஸ்டாலின் ஆற்றிய உரையில் குழந்தைகளுடன் உணவு சாப்பிட்டதால் அவர்களைப் போல் எனர்ஜி கிடைத்துள்ளது என்றும் 20 லட்சம் மாணவர்கள் இன்று காலை உணவு சாப்பிடுவதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும் என தெரிவித்தார். காலை உணவு திட்டம் செலவு அல்ல; தமிழ்ச் சமுதாயத்துக்கான முதலீடு என்றும் 37,400 பள்ளிகளில் 20 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
Advertisement