சென்னை: காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தி காமராஜருக்கு பெருமை சேர்த்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காமராஜரின் 122வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி அவருக்கு பெருமை சேர்த்தேன். மங்காப் புகழ்கொண்ட அவரது வாழ்வையும் தொண்டையும் கல்வி வளர்ச்சி நாளில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பயிற்றுவிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.