இனி ப்ரேக் - அப் செய்ய சொல்லாது AI.. ஓபன் ஏஐ நிறுவனம் உறுதி..புது அப்டேட் என்ன தெரியுமா?
வாஷிங்டன்: இன்றைய தலைமுறை தங்கள் வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை கூட சாட்ஜிபிடியிடம் கேட்டு எடுப்பதாக பரவலாக புகார் எழுந்த நிலையில், அதனை ஓபன் ஏஐ நிறுவனம் சரி செய்து இருக்கிறது. உதாரணமாக இனி நீங்கள் சாட்ஜிபிடியிடம் போய் பிரேக் - அப் செய்து கொள்ளட்டுமா என்று கேட்டல் அது இனி சரி என சொல்லாது. பழங்கால கிரேக்க நடைமுறைப்படி காபி குடித்த பின் கோப்பையில் எஞ்சி இருக்கும் கசடுகளை வைத்து எதிர்காலத்தை கணிப்பார்கள். இதனை டாசியோகிராபி என சொல்வார்கள். தனது கணவரின் எதிர்காலத்தை கண்டறிய முற்பட்ட கிரேக்கத்தை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த மே மாதம் சாட்ஜிபிடியிடம் தனது கணவர் அருந்தி காபி கோப்பையின் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். சாட்ஜிபிடியும் சும்மா இல்லாமல், இ என்ற எழுத்தில் தொடங்கும் பெண்ணுடன் உங்களின் கணவர் தொடர்பில் இருப்பதாக சொல்லி இருக்கிறது.
சாட்ஜிபிடி சொன்னதை நம்பி அந்த பெண்ணும் தனது 12 வருட கால திருமணம் வாழ்க்கையை முறித்து கொண்டு இருக்கிறார். கணவருக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிய அந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என்பதால் இந்த சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளானது. இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது வெளியாகி வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை கூட சிலர் சாட்ஜிபிடியிடம் கேட்டு எடுத்து வந்துள்ளனர் என்பதை நிரூபித்தனர். இந்த சூழ்நிலையில் தான் அண்மையில் ஓபன் ஏஐ நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி பயனர்களுக்கு சாட்போட் நேரடி ஆலோசனை எல்லாம் வழங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் உதாரணமாக இதை செய்யுங்கள் என நேரடியாக சொல்லாமல், இந்த முடிவு எடுப்பதற்கு முன் என்ன என்ன விஷயங்களை யோசிக்க வேண்டும் என பயனர்களிடமே மறு கேள்வி கேட்கும்.
பயனர்கள் தாங்களாகவே சிந்தித்து முடிவெடுக்க வசதியாக கேள்விகளை மட்டுமே இனி சாட்போட் கேட்கும். தொடர்ந்து புரோசன் ஹான்ஸ், அதாவது சாதக, பாதங்களை மட்டுமே யோசிக்க தூண்டும். கூடுதலாக நீண்ட நேரத்திற்கு அதனுடன் பேசி கொண்டு இருந்தால் ஜென்டில் ரிமைண்டர் கொடுக்கும் எனவும் ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. முடிந்தவரை மனநல நிபுணர்களுடன் இணைந்து மெண்டல் அல்லது எமோஷனல் டிஸ்டெஸ்ட்களுக்கான ஆலோசனை வழங்கும் வகையில் தங்களின் போட்டுக்கு இன்புட் வழங்க இருப்பதாக ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அப்டேட் செய்த பின் விரைவில் இந்த வசதிகளை பயனாளர்களுக்கு சாட்ஜிபிடி வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்டேட் வந்த பின் ஏஐ-யிடம் ஆலோசனை மட்டும் பெற்றுக்கொண்டு நமே இனி முடிவு எடுக்கலாம் பிரேக் - அப் செய்யலாமா, வேண்டமா என்பதை.