மூளைச்சாவு ஏற்பட்டு பெண் மரணம் அடைந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம்: மாநில நுகர்வோர் ஆணையம்
சென்னை: மருத்துவர்கள் அலட்சியமே காரணம் என மாநில நுகர்வோர் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை விஜயா மருத்துவமனையில் உயிரிழந்த தேவேந்திரம் இறப்புக்கு ரூ.1 கோடி கேட்டு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில், மருத்துவர்களுக்கு இடம் மட்டுமே வாடகைக்கு தருகிறோம்; நாங்கள் பொறுப்பேற்க முடியாது என விஜயா மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மூக்கடைப்புக்கு சிகிச்சைக்கு வந்தவர் மருத்துவர்கள் அலட்சியத்தால் மூளைச்சாவு அடைந்ததால் பெண்ணின் கணவர், 3 மகள்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement