மேட்டுப்பாளையத்தில் பூத்த பிரம்ம கமலம்
மேட்டுப்பாளையம்: இரவில் மட்டுமே பூக்கும் அரிய மற்றும் மணம் கொண்டது பிரம்ம கமலம் என்று அழைக்கப்படும் நிஷாகந்தி மலர். இந்த மலர் அந்தி சாயும் மாலை பொழுதில் விரிந்து இரவு முழுவதும் தென்றல் காற்றோடு கலந்து மணம் வீசி விடியற்காலையில் வாடிவிடும் தன்மை கொண்டது. இந்த மலர் மேட்டுப்பாளையம் நாடார் காலனி பகுதியில் உள்ள வடிவேலு (48) என்பவர் வீட்டில் நேற்றிரவு மலர்ந்துள்ளது. இதையறிந்த பொதுமக்கள் வடிவேலுவின் வீட்டிற்கு திரண்டு வந்து பார்வையிட்டு மலருக்கு பூஜை செய்து வழிபட்டனர்.