கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வீட்டின் மீது விழுந்த இடி: சிறுவன் காயம்
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வீட்டின் மீது இடி விழுந்து சுவர் இடிந்ததில் 11 வகுப்பு மாணவன் காயம் அடைந்த நிலையில், வீட்டில் இருந்த அனைத்து மின்சாதன பொருட்களும் சேதமாகி உள்ளது. சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் இடி மின்னல் காற்றுடன் பரவலாக மழை பெய்த நிலையில், சிதம்பரம் சிவசக்தி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் நதியா இந்த நிலையில், அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் இடி மின்னல் இடித்து கொண்டிருந்தபோது அவர் வீட்டின் மீது இடி விழுந்துள்ளது.
வீட்டிற்குள் நதியா குடும்பத்துடன் படுத்திருந்த நிலையில், அவரது மகன் அகிலன்மீது சுவர் விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்களான டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷின் மிஷின் உள்ளிட்ட பொருட்களும் சேதமாகி உள்ளது. மேலும் வீடுகளில் மின்சாரம் பயந்ததால் அலறடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். காயம் அடைந்த அகிலனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஐந்து தையல் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.