பவுலிங் தரவரிசையில் முதல்வன் பும்ரா
Advertisement
ஐசிசி டெஸ்ட் போட்டிகளில் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா, 901 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த இடங்களில் தென் ஆப்ரிக்காவின் காகிஸோ ரபாடா, ஆஸியின் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், பாகிஸ்தானின் நோமன் அலி உள்ளனர்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்த ஆஸி வீரர் ஸ்காட் போலண்ட் 6 நிலை உயர்ந்து 6ம் இடத்தை பிடித்துள்ளார். அதேபோல், வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் 15 நிலை உயர்ந்து 14ம் இடத்துக்கு சென்றுள்ளார்.
Advertisement