தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொட்டிக் வேறு ரீசெல்லிங் வேறு... எச்சரிக்கும் பொட்டிக் சகோதரிகள்!

இன்ஸ்டாகிராமைத் திறந்தாலே சரஸ்வதி பொட்டிக், துர்கா பொட்டிக் என ஆரம்பித்து பூமணத்து பிச்சாத்தா பொட்டிக் வரை இருக்கும் அத்தனை அம்மன்கள் பெயர்களிலும் பொட்டிக் ஆரம்பித்து கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார்கள் இன்ஸ்டா பிரபலங்கள். ஆரம்பத்தில் ஷாப்பிங் செய்த உடைகளை அலைபாய விட்டுக் கொண்டு ‘’ Get Ready with me”, ‘’ Shop With Me’’ என சொல்லிக் கொண்டிருந்த இந்த பிரபலங்கள் தொடர்ந்து தம்பதியராக வீடியோக்கள் செய்யத் துவங்கி இப்போது பொட்டிக் ஆரம்பித்து விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால் இவர்கள் நடத்தும் எதுவும் பொட்டிக்கே கிடையாது என்கின்றனர் உண்மையில் வியாபாரம் தெரிந்தவர்களும், நிபுணர்களும். இதைத்தான் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி பொட்டிக் வேறு, வாங்கி விற்பனை செய்யும் தொழில் வேறு என முகத்திரையை கிழித்து வைரலாகி வருகிறார்கள் யமுனா மற்றும் மீனா சகோதரிகள்.

Advertisement

‘‘அந்த வீடியோவில் வருவது நான் தான். எங்களுக்கு ஆர்டர் கிடைக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை ஆனால் பொட்டிக் என நினைத்து ரீசெல்லிங் செய்பவர்களிடம் உடைகள் மற்றும் புடவைகளை வாங்கி பலரும் ஏமாந்து வருகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கணும் அப்படின்னு நினைச்சு தான் அந்த வீடியோவை ரிலீஸ் செய்தோம். உண்மையாகவே முறைப்படி ஃபேஷன் டிசைனிங் படித்து, அதில் அட்வான்ஸ் கோர்ஸ், பயிற்சிகள் எல்லாம் எடுத்துக்கிட்ட பலரும் கூட அமைதியா அவங்க அவங்க ஏரியாவில் நிம்மதியா பிசினஸ் செய்திட்டு இருக்கோம். ஆனால் ஏற்கனவே எங்கேயோ விற்பனை செய்து கொண்டிருக்கிற ஆடைகள் புடவைகளை வாங்கி இவங்க ரீசெல்லிங் செய்யறதுக்கும் பொட்டிக் அப்படின்னு பெயர் வச்சுக்கிட்டு சுத்துறது சரி இல்லை” வருத்தமும் ஆதங்கமும் ஒருசேர பேசத் துவங்கியவர் தன்னைத்தானே சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள தொடர்ந்தார் அக்கா யமுனா.

நான் யமுனா பிபிஏ படிச்சிருக்கேன். மேலும் பொட்டிக் மேனேஜ்மென்டிலும் அட்வான்ஸ் கோர்ஸ் முடிச்சிருக்கேன். என் தங்கச்சி மீனா பிகாம் முடிச்சுட்டு அவங்களும் பொட்டிக் மேனேஜ்மென்ட் படிச்சவங்க. ரெண்டு பேருமே படிப்பை முடிச்சு ஒரு தனியார் கம்பெனியிலும் வேலை செய்தோம். என்னுடைய கணவர் பிரகாஷ் கனடாவில் வேலை செய்கிறார். அவர் கொடுத்த தன்னம்பிக்கையும் சப்போட்டும் சேர்ந்து நானும் என் தங்கச்சியும் ஒரு பொட்டிக்கை ஆரம்பிச்சோம். ரொம்ப நல்லாவே போயிட்டு இருக்கு”. யமுனாவை தொடர்ந்தார் மீனா. ‘‘நாங்க பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தான். அப்பா ஜெயச்சந்திரன், அம்மா ஜெயராணி. விவசாயம்தான் எங்களுக்கு குடும்பத் தொழில். மதுரை பக்கம் சோழவந்தான் பூர்வீகம். திருமணத்துக்கு அப்புறம் சென்னை வந்து செட்டில் ஆகிட்டோம். அடிப்படையிலேயே எங்க ரெண்டு பேருக்கும் பிசினஸ் செய்ய ரொம்ப பிடிக்கும். அதனால்தான் நான் பி.காம் அக்கா பிபிஏ இப்படி பிசினஸ் சார்ந்த படிப்பாவே படிச்சோம். தொடர்ந்து தனியார் கம்பெனியிலும் வேலை செய்தோம். அப்பறம்தான் எங்க ரெண்டு பேருடைய பிசினஸ் ஆர்வத்தை ஏன் பயன்படுத்தி ஒரு சொந்த பிசினஸ் ஆரம்பிக்கக்கூடாது அப்படின்னு நினைத்தோம். ஆனால் எந்த தொழிலை ஆரம்பிக்கிறதா இருந்தாலும் அதற்குரிய முறையான படிப்பு பயிற்சி இதெல்லாம் முடிச்சிட்டு தான் ஆரம்பிக்கணும் அப்படின்னு தீர்மானம் செய்தோம். ரெண்டு பேருமே ஒருசேர பொட்டிக் மேனேஜ்மென்ட் முடிச்சு, ஆடை வடிவமைப்பும் முறைப்படி கத்துக்கிட்டோம். மாமா கொடுத்த சப்போர்ட்டில் இதோ இப்போ எங்க பிசினஸ் நல்லா போயிட்டு இருக்கு” ஒரு பொட்டிக் துவங்க என்ன தகுதி வேண்டும். பொட்டிக் மற்றும் ரீசெல்லிங் இரண்டுக்குமான வித்தியாசம் என்ன? தொடர்ந்தார் யமுனா.

‘‘பொட்டிக் பிசினஸ் துவங்க நிச்சயம் பொட்டிக் மேனேஜ்மென்ட் யாராவது படிச்சிருக்கணும். அவங்கதான் பொட்டிக் நிர்வாக பொறுப்பில் இருக்கணும். தொடர்ந்து முறைப்படி அளவெடுத்து யாருக்கு என்ன உடை எப்படி வேணுமோ அப்படி டிசைன் செய்து கொடுக்கத் தெரியணும். ஒவ்வொரு உடலமைப்பும் ஒவ்வொரு விதமானது, ஒரே பேட்டர்னை இன்னொருத்தருக்கு ரிப்பீட் செய்யவே கூடாது. அதனால்தான் பொட்டிக் ஷோரூம் களில் மெனு கார்டு போல் ஒரு 20 டிசைன்களை வைத்துக்கொண்டு காட்ட மாட்டார்கள். யாருக்கு என்ன தேவையோ எந்த அளவில் உடைகள் இருக்கணுமோ, எது அவங்க உடலை உறுத்தாத வகையில் இருக்குமோ அப்படிப்பட்ட உடைகளை டிசைன் செய்து கொடுக்கறதுதான் பொட்டிக் வேலை. உதாரணத்துக்கு ஒருவருக்கு இரண்டு கைகளுக்கும் கூட அளவுகள் மாறும். ஒவ்வொரு கையையும் தனித்தனியாக அளவு எடுக்கணும். பெரும்பாலும் தையல் கடைக்காரர்கள் உடலின் ஒரு பக்கத்தில் எடுத்துக் கொண்ட அளவைத்தான் அப்படியே இன்னொரு பக்க உடலுக்கு தைப்பார்கள். எதுவும் கஸ்டமைஸ்ட் இதுதான் பொட்டிக். மெட்டிரீயல், ஆடைக்கான டிசைன் எல்லாமே டிசைனரும், கஸ்ட மரும் அமர்ந்து பேசி, முடிவாக கிடைக்கும் உடை தான் பொட்டிக் கொடுக்கும் உடைகள்’’ ரீசெல்லிங் சரி, அதில் நடக்கும் ஏமாற்று வேலைகள் என்னென்ன கேட்டவுடன் பேசத் தயாரானார் மீனா.

‘‘No COD, NO Refund, No Exchange” இதை எல்லாம் அவர்கள் முகப்பிலேயே பதிவு செய்துதான் தொழிலையே ஆரம்பிப்பார்கள். காசு கொடுத்து வாங்கியவர் பொருள் பிடிக்கவில்லை எனில் மாற்றிக் கொள்ளும் வசதி கூட இல்லாமல் அப்படி என்ன தொழில் செய்கிறார்கள். பெரும்பாலும் ஒரு மாதம் முதல் 2 மாதங்கள் வரை டெலிவரி டைம் எடுத்துக்கொள்வதும் நடக்கிறது. எல்லா புடவையிலும் ஒன்றிரண்டு டிசைன்களை வைத்துக்கொண்டு அதையும் இவர்களே கட்டி அழகு பார்த்து வீடியோ பதிவு செய்த பின்புதான் விற்பனைக்கு வரும். எல்லோரையும் குறை சொல்லிவிட முடியாது. எங்கள் பகுதிகளிலேயே நிறைய பெண்கள் வாட்சப், இன்ஸ்டா உள்ளிட்டவற்றில் இந்த ரீசெல்லிங் முறையில் புடவைகள், உடைகள் விற்பனை செய்வதுண்டு. ஆனால் இந்த இன்ஸ்டாவில் வரும் இன்ஃப்ளூயன்சர்கள் பலர் தங்களுக்கான ஃபாளோயர்களைக் கொண்டு ஏமாற்று வேலைதான் செய்கிறார்கள். இதில் வாங்கும் புடவை விலை ரூ. 300, விற்கும் விலை ரூ. 500, இதில் கொரியர் சார்ஜ் வேறு எல்லாம் சேர்த்து மொத்தமாக ரூ. 300 புடவை நம் கைக்கு வரும் போது ரூ. 600 முதல் ரூ. 700 வரை விற்கிறார்கள். இதற்கு அவர்கள் புடவையை ஸ்க்ரீன்ஷாட் அடித்து கூகுளில் தேடினாலே புடவையின் உண்மையான விற்பனைக்கான இணையதளம் கிடைத்துவிடும். பண்டிகை காலம் வேறு கூடுமானவரை இப்படியான போலி பொட்டிக் விளம்பரங்களில் மாட்டிக் கொள்ளாதீர்கள். அதற்கு உங்கள் அருகில், உங்கள் நட்பு வட்டத்தில் ஏதோ ஒரு பெண் வீட்டில் இருக்கும் நேரத்தில் ஒரு குறைவான வருமானம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் ரீசெல்லிங் செய்து கொண்டிருப்பார். அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்’’ அழுத்தமாகவே சொல்கிறார்கள் பொட்டிக் பிஸினஸில் அசத்தும் யமுனா - மீனா சகோதரிகள்.

- ஷாலினி நியூட்டன்

Advertisement

Related News