எல்லை நிலவரம், விமான நிலைய பாதுகாப்பு குறித்து அமைச்சர் அமித் ஷா ஆலோசனை
Advertisement
* பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தல்பஞ்சாப் மற்றும் அரியானாவின் தலைநகரான சண்டிகரில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று விமானப்படை நிலையத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக சண்டிகரில் சைரன்கள் ஒலிக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்கவும், பால்கனிகளில் யாரும் நிற்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. பஞ்ச்குலாவிலும் இதேபோன்று சைரன் ஒலிக்கவிடப்பட்டது. பஞ்சாபின் மொகாலியில் சண்டிகரையொட்டி இருக்கும் பகுதியில் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. அனைத்து கல்வி நிறுவனங்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன.
Advertisement