டெல்லி: எல்லையில் படைகளை உடனடியாக குறைப்பது குறித்து பரிசீலிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. "இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர் (DGMO) இடையேயான பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு நடந்தது. இரு தரப்பிலும் இருந்து ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை தொடர்வது குறித்து பேசப்பட்டு, இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. எல்லைகளில் படை வீரர்களைக் குறைப்பதை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை பரிசீலிப்பது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது" என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.