எல்லைதாண்டி மீன் பிடித்ததாக 10 ஆந்திர மீனவர்கள் கைது: வங்கதேச கடற்படை அட்டூழியம்
திருமலை: எல்லைதாண்டி மீன் பிடித்ததாக 10 ஆந்திர மீனவர்களை வங்கதேச கடலோர காவல்படையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். அப்போது, நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வங்கதேச கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அமைச்சர் கொண்டப்பள்ளி ஸ்ரீநிவாஸ் வங்கதேசத்தில் உள்ள இந்திய உயர் ஆணையர் பிரணய் வர்மாவுடன் தொலைபேசியில் உரையாடினார்.
Advertisement
Advertisement