எல்லை சாலைகள் அமைப்பு நிறுவனத்தில் 542 இடங்கள்
பணியிடங்கள் விவரம்:
1. எம்எஸ்டபிள்யூ/ வெஹிக்கிள் மெக்கானிக்: 324 இடங்கள் (பொது-181, எஸ்சி-45, எஸ்டி-26, ஒபிசி-54, பொருளாதார பிற்பட்டோர்-18). வயது வரம்பு: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக் இன் மோட்டார் வெஹிக்கிள்/டீசல்/ஹீட் இன்ஜினில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. எம்எஸ்டபிள்யூ (பெயின்டர்): 13 இடங்கள் (ஒபிசி-8, எஸ்சி-4, எஸ்டி-1). வயது: 18 லிருந்து 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பெயின்டர் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற அப்ரன்டிஸ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3. எம்எஸ்டபிள்யூ (மெக்கானிக் மோட்டார்/வெஹிக்கிள்ஸ்/டிராக்டர்ஸ்). வயது: 18 லிருந்து 25க்குள். மெக்கானிக் மோட்டார், வெஹிக்கிள்ஸ், டிராக்டர்ஸ் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற அப்ரன்டிஸ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 157 செ.மீ., உயரம், 50 கிலோ உடல் எடையை பெற்றிருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 75 செ.மீ அகலம், விரிவடைந்த நிலையில் 80 செ.மீ இருக்க வேண்டும். 10 நிமிடங்களில் 1.6 கி.மீ., தூரத்தை ஓடி முடிக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உடல் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.50/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு, செய்முறை தேர்வு, பெட் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கூடுதல் விவரங்களுக்கு www.bro.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.11.2025.