வாக்குச்சாவடி நிலை அலுவலருடன் பூத் கமிட்டி உறுப்பினர் செல்லலாம்: புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி வாக்காளர் பதிவு அதிகாரி அறிவிப்பு
புதுச்சேரி: எஸ்ஐஆர் பணிக்காக புதுச்சேரியில் வாக்குச்சாவடி நிலை அலுவலருடன் பூத் கமிட்டி உறுப்பினர்கள் செல்லலாம் என புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி வாக்காளர் பதிவு அதிகாரி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஆளுங்கட்சி தலையீடு இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது. எஸ்ஐஆர் பணியில் பாஜக, என்.ஆர். காங்கிரசாரை ஈடுபட அனுமதிப்பது ஏன்? என காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் கேள்வி எழுப்பியிருந்தார். எஸ்ஐஆர் பணியில் முறைகேடு குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளதாகவும் காங்கிரஸ் கூறியிருந்தது. எஸ்ஐஆர் பணியில் முறைகேடு குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளதாகவும் காங்கிரஸ் கூறியிருந்தது. காங்கிரஸ் குற்றச்சாட்டை அடுத்து வாக்குச்சாவடி நிலை அலுவலருடன் பூத் கமிட்டி உறுப்பினர்கள் செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. பூத் கமிட்டி உறுப்பினரல்லாத அரசியல் கட்சிகளை சார்ந்த மற்ற நபர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.