திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை மலை கிராமத்துக்கு போதிய போக்குவரத்து வசதி செய்து தர உத்தாவிட கோரி மனு அளிக்கப்பட்டது. பூம்பாறை மலை கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். காட்டு வழியே செல்லும் மாணவர்கள் வனவிலங்குகளால் தாக்கப்படும் அபாயம் உள்ளது. போக்குவரத்து வசதி முறையாக செய்து தரப்படாததால் மாணவிகள் பாதியிலேயே படிப்பை கைவிடும் நிலை உள்ளது என மனு தாரர்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டதில் ஒரு நாளைக்கு காலை முதல் மாலை வரை 4 முறை அரசு பேருந்து இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பேருந்து இயக்கப்படுவதை உறுதி செய்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 18-க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டது.