டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!
Advertisement
டெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அதிகாரிகள் பிற்பகல் வரை நீதிமன்ற வளாகத்தை காலி செய்ய உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அந்த மின்னஞ்சலில், மூன்று நீதிமன்ற அறைகளிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக எழுதி இருந்தது.
உடனே வெடிகுண்டுப் படையினர் மற்றும் மோப்ப நாய் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். மேலும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளனர். டெல்லி காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து நீதிமன்றத்தை காலி செய்துள்ளது.
Advertisement