மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 391 புள்ளிகள் உயர்வு..!!
வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே உயர்ந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள், 0.48% உயர்ந்து முடிந்தன. ஜிஎஸ்டி குறைப்பு வாக்குறுதி, உக்ரைன் போர் முடிவுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பில் பங்குச் சந்தையில் ஏற்றம் கண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 391 புள்ளிகள் அதிகரித்து 81,665 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 19 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 104 புள்ளிகள் உயர்ந்து 24,981 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
Advertisement
Advertisement