தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டில் இதுவரை 229 வெடிகுண்டு மிரட்டல்கள்: தேடுதல் வேட்டையில் சைபர் க்ரைம் போலீசார்!

சென்னை: தமிழ்நாட்டில் இந்​தாண்​டில் இது​வரை 229 வெடிகுண்டு மிரட்​டல்​கள் விடுக்​கப்​பட்​டுள்​ளன. இதில் தொடர்​புடைய நபரை கைது செய்ய சர்​வ​தேச போலீ​ஸாரின் உதவி நாடப்​பட்​டுள்​ளது. எப்​போ​தாவது ஒரு​முறை என்ற நிலை மாறி, தின​மும் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கும் நிகழ்​வு​கள் தொடர்ந்து நடை​பெற்று வருகின்​றன. அது​வும் டிஜிபி அலு​வல​கத்​துக்கே இ-மெ​யில் அனுப்பி பள்​ளி​கள், கல்வி நிறுவனங்​கள், விமான நிலை​யங்​கள், முதல்​வர், எதிர்க்கட்சி தலை​வர், அமைச்​சர்​கள், நடிகர், நடிகைகள், தொழில் அதிபர்​களின் வீடு​களுக்கு வெடிகுண்டு வைத்​துள்​ள​தாக மிரட்​டல் விடுக்​கப்​படு​கிறது.

Advertisement

தலை​மைச் செயல​கம், ஆளுநர் மாளிகை மற்​றும் மத்​திய, மாநில அரசு அலு​வல​கங்​களும் இதற்கு விதி​விலக்கல்ல. நேற்று அண்ணா சாலை​யில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்​துக்கு மிரட்​டல் வந்​தது. மிரட்டலை​யடுத்து போலீ​ஸார் வெடிகுண்டு நிபுணர்​கள் மற்​றும் மோப்ப நாய்​களு​டன் விரைந்து சென்று சோதனை மேற்​கொள்​கின்​றனர். இதனால் அவர்​களது உழைப்பு தின​மும் வீணடிக்​கப்​படு​வதோடு, மிரட்டலுக்கு உள்​ளான இடத்​தில் உள்​ளவர்​கள் அச்​சத்​துக்கு ஆளாகின்​றனர்.

சென்​னை​யில் இந்​தாண்டு இது​வரை​யில் 229 வெடிகுண்டு மிரட்​டல் இ-மெ​யில்​கள் டிஜிபி அலு​வல​கத்​துக்கு வந்துள்​ளது. அனைத்து மிரட்​டல்​களும் வெளி​நாட்​டில் இருந்​த​வாறு ‘டார்க் வெப்’ என்ற இணை​யத்தை பயன்படுத்தி அதன் மூலம் விடுக்​கப்​படு​கிறது. இதனால் மிரட்​டல் ஆசாமிகளை அடை​யாளம் காண்​பது போலீ​ஸாருக்கு கடின​மாக உள்​ளது. இருப்​பினும் சர்​வ​தேச போலீ​ஸார் உதவி​யுடன் வெடிகுண்டு மிரட்​டல் ஆசாமியை கைது செய்ய போலீ​ஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். வெடிகுண்டு மிட்​டலை​யடுத்து சம்பவ இடம் விரைந்து சோதனை நடத்த சென் னை​யில் வெடிகுண்​டு​களை கண்டறிந்து அகற்​றும் 4 அணி​கள் உள்​ளன. அதோடு மட்​டும ல்​லாமல் 4 மோப்ப நாய்​களும் உள்ளன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Advertisement

Related News