சென்னை தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
சென்னை: சென்னையில் தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறியும் சோதனை கருவிகள் மூலமாக பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தை பொறுத்தவரை 6,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், அமைச்சர் உதவியாளர்கள் வந்துசெல்ல கூடிய இடமாக இருக்கிறது. முதலமைச்சர் வந்து செல்லும் இடங்கள், கார் நிறுத்த கூடிய இடங்கள் சோதனை என்பது நடைபெற்றது.
வாரத்தில் முதல் நாள் என்பதால் தலைமைச் செயலகத்துக்கு பொதுமக்கள் பெட்டிசன் கொடுப்பதற்காக அதிகளவில் கூடியிருந்தனர். இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் பெட்டிசன் கொடுக்கக்கூடிய இடங்கள், கார் பார்க்கிங், பைக் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மோப்பநாய்களை கொண்டு சோதனை நடைபெற்றது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தலைமைச் செயலகத்துக்கு மூன்று அடுக்கு போலீசார் பாதுகாப்பு அமைக்கப்பட்டது.